
posted 7th February 2023
கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் கடல் கடல் அட்டைப் பிடித்த 03 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
சனிக்கிழமை (04) கல்பிட்டி இப்பான்தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வெள்ளரி அட்டை பிடித்த 03 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் 17 சங்கு குண்டுகள், டைவிங் கியர் 01 மற்றும் சுமார் 671 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தீவுக்கடல் மற்றும் நாட்டின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே இக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையானது எஸ்எல்என்எஸ் விஜயா மூலம் இப்பான்தீவிலிருந்து பெப்ரவரி 04 ஆம் திகதி காலை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 54 வயதுக்குட்பட்ட கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
03 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)