
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ்ப்பாணம் காரைநகர் தீவுப்பகுதியில் 2023 பிப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 128 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கடற் பாதைகள் ஊடாக ஆட்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படும் பரந்தளவிலான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளை அவதானித்து வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையின் போது வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை பிரிவு பெப்ரவரி 19 ஆம் திகதி காரைநகர் தீவிற்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் ரோந்து சென்ற போது கடலில் மிதந்து வந்த 03 பயணப் பைகளைக் கைப்பற்றியது
சந்தேகத்திற்கிடமான பயணப் பைகளில் சுமார் 128 கிலோ மற்றும் 065 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சா நிரப்பப்பட்ட 42 பொதிகள் இருந்தது எனவும், அப்பகுதியில் கடற்படையினர் மேற் கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் சரக்குகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் விட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெருமதி. ரூ. 42 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது
இதேவேளை மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது என்று கடற்படையினரின் செய்தித் தொடர்புகள் தெரிவிக்கின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)