இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி வத்தைகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வத்தைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வாரத்தில் இருநாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடிப்பதற்காகன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இலுவைப்படகுகள் போன்று ஆபத்து இல்லாத வத்தையின் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் வாரம் இரு தினங்கள் மீன்பிடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இலுவைப்படகுகள் 150 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைக் கொண்டே மீன்பிடியில் ஈடுபடுவதால் இதனால் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட மாகாண மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன் இப்பகுதி கடல் வளங்களும் அழிக்கப்பட்டு வருவதாக நீண்டகாலமாக இலங்கை மீனவர்கள் போராடி வருகின்றனர்.

இதற்கான சரியான முடிவு எடுக்கப்படாத நிலையில் 30 , 40 குதிரை வலுகொண்ட இயந்திரங்கள் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய வத்தை மீனவர்களை மீன்பிடிக்கு அனுமதிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் இலங்கைக்கு வருமானம் ஈட்டும் நிலை ஏற்படுமாகில் இந் நிதி வட மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி வத்தைகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)