
posted 28th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இயற்கை விவசாய அறிமுக நிகழ்வும், மதிப்பளிப்பு நிகழ்வும் திங்கள் (27) கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது.
ஈழத்து எழுத்தாளர் வன்னியூர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர் வரதீஸ்வரன் கலந்து கொண்டார். விருந்தினர் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து இயற்கை விவசாயத்தை பாடசாலைகள் ஊடாக மாவட்டத்தில் மேம்படுத்தும் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை முதல்வர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)