இந்திய அமைச்சரை வரவேற்க வெய்யிலில் காய்ந்த மாணவர்கள்

இந்திய அமைச்சரை வரவேற்பதற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்காமல் வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்தமைக்கு அரச அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், இது விடயத்தில் பொறுப்புணர்ந்து செயல்பட்ட ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் மாணவர்களை விமான நிலையத்துக்குள் நுழைய நடவடிக்கை எடுத்தார்.

நேற்று வியாழன் (09) பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

இந்தியாவின் கடற்றொழில் இணை அமைச்சர் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரை வரவேற்பதற்கு பலாலி விமான நிலையத்துக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்திய அமைச்சரை வரவேற்க வெய்யிலில் காய்ந்த மாணவர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)