
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் நாம். மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு வாய் இருந்தால் சொல்லும். மாதக் கணக்கில் வீதியில் படுத்து கிடந்த நாங்கள் கச்சேரியை இழுத்து மூடி மாதக் கணக்கில் வீதியில் படுப்போம்”, என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்,"அண்மையில், எனது பிரத்தியேக செயலாளர் இந்த மாவட்ட மக்களின் ஒரு வாழ்வாதார உதவி திட்டத்தை எனது அமைச்சு ஊடாக செய்வதற்கான ஓர் அனுமதி கடிதத்தை வாங்க சென்றபோது மாவட்ட அரசாங்க அதிபர் 2015 தொடக்கம் தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஒரு பாராளுமன்றமாக இருக்கின்ற என்னை எனது செயலாளரிடம் கேட்டுள்ளார் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் என்ன அமைச்சர் என்று.
ஒரு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ன அமைச்சர் என்று தெரியாது. என்னுடைய செயலாளர் அவருக்கு கூறி இருக்கின்றார் உங்களுக்கு தெரியாவிட்டால் இணையத்தில் போய் தேடிப் பாருங்கள் அவர் என்ன அமைச்சர் என்று உங்களுக்கு புரியும் என்று.
இதுதான் இன்று மாவட்டத்தின் நிலவரம். இன்று எந்த அரச அலுவலகங்களாக இருந்தாலும் எமது மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் நடைபெற வேண்டும். மக்களுக்கான மதிப்பளிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் ஜனாதிபதி மக்களுக்காகத்தான். பிரதமர், அமைச்சர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்க அதிபர். மக்களுக்காக அரசியல்வாதிகள் மக்களுக்காகத்தான் அரச அதிகாரிகள் அதை யாரும் மறந்து விடக்கூடாது.
பழைய போராட்டங்கள் இந்த மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் புண்ணியம் கிடைக்கும் மாவட்டத்தை விட்டு நீங்கள் வெளியேறலாம். எங்களது பழைய போராட்டங்களை நீங்கள் பார்க்கவில்லை. தெரியாவிட்டால் ஊடக வாயிலாக தேடிப் பாருங்கள். பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் நாம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு வாய் இருந்தால் சொல்லும் மாதக் கணக்கில் வீதியில் படுத்து கிடந்த நாங்கள் கச்சேரியை இழுத்து மூடி மாதக் கணக்கில் வீதியில் படுப்போம்.
மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்.” என அவர் தெரிவித்துள்ளார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)