
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இறந்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு 'மெசிடோ' நிறுவனத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்றது.
திங்கள் கிழமை (20) காலை மன்னார் நகரில் பிரதான போக்குவரத்து நிலையத்துக்கு முன்பாக துருக்கி மற்றும் சிரியாவில் அன்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்காக இவ்விடத்தில் சர்வமத தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுநிலையினரும் ஒன்றுகூடி பிராத்தனையில் ஈடுபட்டதுடன் யாவரும் சுடர் எற்றி மலர்கள் தூவி தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
அத்துடன் சர்வமத தலைவர்களும் இவ்விடத்தில் அனுதாப உரைகள் நிகழ்த்தினர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)