
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
களியாட்ட நிகழ்வோன்றில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் 18.02.2023 அன்று களியாட்ட நிகழ்வில் இவ்வாறு அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்றல் நடவடிக்கை மற்றும் நோயாளருக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் ஒலிபெருக்கியை ஒலிக்ச் செய்த குற்றச்சாட்டில் ஒலிபெருக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஒலிபெருக்கிச்சாதன பொருட்கள் அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)