
posted 12th February 2023
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதி தலைவர்களில் ஒருவரும், அட்டாளைச்சேனை தேர்தல் குழுவின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் அங்குள்ள பீச் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்றுக் கட்சிகளிலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)