
posted 8th February 2023
13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று நேற்று (07) செவ்வாய் யாழ்ப்பாணம் வந்த மூன்று மகாநாயக்கர்கள் தலைமையிலான தேரர்கள் குழு கூறியுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக அறிவதற்காக பிக்குகள் அடங்கிய சர்வமத குழு நேற்று யாழ்ப்பாணம் வந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வமதங்களை சேர்ந்த தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் பின்னர் சர்வமதத் தலைவர்கள் அனைவரும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை
நடத்தினர். இதன்போதே, மேற்படி விடயத்தை அவர்கள் தெரிவித்தனர். 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று மகாநாயக்கர் தேரர்கள் நால்வர் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள நிலையில் இவர்களின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)