
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மஹரகம பிரதேசத்தில் இருந்து சிவனடி பாத மலைக்கு ஒரு பேரூந்தில் சென்று தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பிச் செல்லும் வேளையில் ஞாயிறு (19) இரவு 09:15 மணியளவில் நோட்டன் தியகல பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் இப் பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் வட்டவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து கவிழ்ந்த இடத்திலேயே இரு பெண்கள் மரணித்த நிலையில் வட்டவளை வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது எனவும் அனேகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் அன்று இப்பகுதியில் மழையுடனான காலநிலை காணப்பட்டதாகவும் மேக மூட்டம் அதிக அளவில் இருந்தவேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)