
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் நகர் பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளுடன் ஒருவர் 26.02.2023 அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொ.கொ 83790 விபுர்த்தி உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நகர் பகுதிக்குள் தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்ச்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தை சற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டபோதே 41 கிலோ 620 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இப்போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நபர் கருங்கண்டல் வண்ணாகுளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட பதில் கடமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகேவின் பணிப்பின்பேரில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி பொ.ப. ரத்நாயக பொ.சா.36501 ரத்னமணல தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபரையும் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)