
posted 28th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் தீவில் தற்போதுள்ள தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் பிரேரிக்கப்பட்டுள்ள கொள்ளளவு முதலாம் கட்ட அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கருத்திட்ட பிரிவிற்காக என பாதுகாப்பிற்கான ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையானது பொது மக்களின் பரிசீலனைக்காக மன்னார் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் வார இறுதி மற்றும் அரச விடுமுறை நாட்கள்தவிர முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 மணி வரை 2023.02.22 ஆம் திகதி முதல் 2023.04.06 ஆந் திகதி வரை 30 நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே பொதுமக்கள் இதனை பார்வையிட்டு இத தொடர்பான கருத்துக்களை வழங்க முடியும் என மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் பொது மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)