மக்கள் பேராட்டம்

வாழைச்சேனை மத்திய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடையில் வர்த்தக நிலையம் ஒன்றின் கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதால் பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் சரும நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தே இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

குறித்த வர்த்தக நிலையத்தின் முன்பாக ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள் இந்தப் போராட்டத்தை

முன்னெடுத்தனர். அத்துடன், அங்கு வந்த அதிகாரிகளிடம் மனுவையும் அவர்கள் கையளித்தனர்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக அந்தப் பணிகளை ஒரு வாரத்துக்கு நிறுத்துமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உத்தவிட்டுள்ளார். ஆய்வு முடிவைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பேராட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)