
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வவுனியாவில் போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்யப்படுவதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ். ஜெயக்கொடி ஆலோசனையில் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் சந்தேக நபர் ஒருவரை மறித்துச் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அவரின் உடைமையிலிருந்து போதையை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்தை வைத்திருந்த 23வயதுடைய இளைஞரையும் கைது செய்தனர்.
குறித்த மருந்துகள் அளவுக்கு அதிகமாக உள்கொள்ளும் சமயத்தில் போதையை ஏற்படுத்தக்கூடியவை எனவும், மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவுக்குள் விற்பனை செய்யப்படும் மருந்தை இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரை விற்பனை செய்வது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)