
posted 17th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக டாக்டர். ஏ.எல். பரீத் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள டாக்டர் பரீத் 35 வருட காலம் வைத்திய துறையில் அளப்பரிய சேவையாற்றி வருவதுடன் தற்சமயம் கொழும்பு நவலோக வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியாகவும் சேவையாற்றி வருகின்றார்.
டாக்டர் பரீத் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் இந்த வைத்தியசாலையின் வளர்ச்சிக்காகவும், உயர்ச்சிக்காகவும்
பெரும் பங்காற்றிய ஒருவர் என்பதுடன் இதேவேளை பல்வேறு சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்துவரும் ஒருவரும் ஆவார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக கிடைக்கப்பெற்றுள்ள நியமனத்தை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தாம் பேரவை உறுப்பினராக இருக்கும் காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும் இப் பல்கலைக்கழகம் சமூகத்திற்காக ஆற்றும் பங்களிப்புகளுக்கு ஒரு உந்து சக்தியாகவும் திகழ இருப்பதுடன் இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஒன்றை நிறுவுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தாமும் உறுதுணையாக இருந்து அதற்காக உழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, மாளிகாவத்தை ஆதார வைத்தியசாலை உட்பட மேலும் பல வைத்தியசாலைகளில் தனது அளப்பரிய வைத்திய சேவைகளை ஆற்றிவந்துள்ள டாக்டர் பரீத் சுகாதார நிறுவனங்களில் சிறந்த நிருவாகியாகவும் மக்கள் சேவகனாகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)