பாராபட்சம் காட்டும் சோடிக்கப்படும் வழக்குகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தென்னிலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, வடக்கில் அமைதி வழியில் போராட்டும் இந்து மதகுரு வேலன் சுவாமி மீது அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரில் நடந்த கிழக்குக்கான பேரணியில் பங்கேற்ற வேலன் சுவாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று திங்கள் (20) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பொலிஸார் தாக்கல் செய்த பி அறிக்கையில், உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் இவ்வாறான ஊர்வலங்கள், கூட்டங்களை நடத்த முடியாது. இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசமைப்பின் 15ஆவது பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என ஒலிபெருக்கியில் அறிவித்தோம். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டு, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்தார்.

பொலிஸார் குறிப்பிட்டதை போல சட்ட ஏற்பாடுகள் இல்லை, உள்ளூராட்சி சட்டவிதிகள் 81, 81 பி இன் கீழ் வரும் சம்பவங்கள் தேர்தலுடன் தொடர்புடையவை. ஆனால், இது தேர்தலுடன் தொடர்புடைய ஒரு பேரணியல்ல. ஆகவே, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தால் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றுபொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறு பாதிக்கப்பட்டதாக யாராவது முறைப்பாடு செய்துள்ளார்களா? இல்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து பேரணி புறப்பட்டு மட்டக்களப்புக்கு சென்றது. மட்டக்களப்பிலும் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த பொலிஸ் நிலையத்தின் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. யாழ்ப்பாண பொலிஸார் மட்டுமே வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டம் தெரியாமல், சட்டத்தை புரிந்து கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும். இந்த வழக்கில் வேலன் சுவாமி 7ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். தெற்கில் எத்தனையோ போராட்டங்கள் நடக்கின்றன. அதில் பௌத்த பிக்குகள் கலந்து கொள்கிறார்கள். பொலிஸார் அதை கண்டுகொள்வதில்லை. அண்மையில் பௌத்த பிக்குகளால் 13ஆவது திருத்தம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் சார்பில் வேலன் சுவாமியென்ற ஒரேயொரு இந்துமதகுருதான் மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அவரை எல்லா வழக்கிலும் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளனர். அவர் இந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கவில்லை. கலந்து கொண்டது மட்டும்தான். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். இதில் 7 பேரை மாத்திரமே தெரிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பொலிஸார் கவலைப்படும் முதல் சந்தர்ப்பம் இது. ஆனால், பொலிஸாருக்கு எதிராகத்தான் அடிப்படை மனித உரிமைகள் ஆணை உருவானது. பொலிஸார், அரசாங்கத்துக்கு எதிராகத்தான் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்யலாம் என்றார்.

போராட்டத்தால் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் யாராவது முறைப்பாடு செய்தனரா? என நீதிவான் ஆனந்தராஜா பொலிஸாரிடம் கேட்டார்.

பொலிஸார் “இல்லை” என்றனர்.

இதையடுத்து, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதாக நீதிவான் அறிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கே.வி. தவராசா, என். சிறிகாந்தா ஆகியோர், இந்த வழக்கை தொடர்வதா இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு பொலிஸாரை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, வழக்கை தொடர்வதா இல்லையா என்பது பற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பாராபட்சம் காட்டும் சோடிக்கப்படும் வழக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)