நிலத்தை அபகரிப்போரின் அடாவடித்தனம். பதற்ற நிலையில் மக்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மயிலத்தமடு - மாதவனையில் தமிழருக்கு சொந்தமான கால்நடை ஒன்றை பெரும்பான்மை இனத்தவர் சுட்டுக் கொன்றனர். அத்துடன், அப்பகுதிகளில் குடிசைகளையும் அமைத்து வருகின்றனர். இதையடுத்து அந்தப் பகுதியில் அச்சம் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை தமிழ் மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பகுதியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களை தாக்கியதுடன், அவர்களின் கால்நடைகளையும் கொன்று வருகின்றனர். இதனால், அங்கு தமிழ் மக்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கு பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில், வழக்கு ஒன்றும் நீதிமன்றில் உள்ளது. ஆனாலும், இந்தப் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தே வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மாடு ஒன்றை அவர்கள் சுட்டுக்கொன்றனர். அத்துடன், அப்பகுதிகளில் குடிசைகளையும் அமைத்து வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்களிடையே அச்சம் கலந்த பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

நிலத்தை அபகரிப்போரின் அடாவடித்தனம். பதற்ற நிலையில் மக்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)