
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (25) சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
மின்சாரம், நீர், சமையல் எரிவாயு, உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்கவும், தேர்தலை வென்றெடுக்கவுமே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)