
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிராத்திக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மகா சிவராத்திரிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது செய்தியில் தொடர்ந்து தெரிவிப்பதாவது;
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் சிவபெருமானை வழிபடுகின்றனர்.
'இருள் நீங்கி ஒளி பரவட்டும்’ என்ற பிராத்தனையுடன் கண்விழித்து இரவு முழுவதும் பிராத்தனை செய்கின்றனர்.
இது ஒருவருக்கொருவர் அமைதி நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது.
சிவபெருமானின் இந்த பிரகாசமான இரவில் நாம் நமது உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தால் நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் கடந்து அமைதி நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாட்டை நாம் நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.
மகா சிவராத்திரியில் ஏற்றப்படும் தீப ஒளியால் அனைத்து துன்பங்களும் நீங்கி வளமான இலங்கையின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)