
posted 7th February 2023
மன்னாரில் மெசிடோ நிறுவனம் மற்றும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் தொழில் வாய்ப்புக்கான கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைப்புடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு செயல் அமர்வு செவ்வாய் கிழமை (07) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இத் தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபை மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜே.எம்.ஏ. லெம்பேட் , கைத்தொழில் முகாமையாளர் எம்.ரி.எம். வார்சத் இவர்கள் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)