
posted 16th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர். ஏ.எம்.எம். இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வெற்றிடம் கடந்த பல மாதங்களாக நிலவிவந்த நிலையில், அந்த இடத்துக்கு இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோமாரி மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய அவர் பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையிலேயே அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் இஸ்ஸடீன் லயன்ஸ் கழகம் உள்ளிட்ட பல சமூக சேவை அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)