
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் ஏற்பட்ட நாடுகளில் பூகத்தினால் உயிரிழந்த மக்களுக்காக சம்மாந்துறை பிரதேசசபையில் அனுதாபத் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 59 ஆவது மாதாந்த சபை அமர்வு பிரதேசசபை சபா மண்படத்தில், சபையின் புதிய தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வின் போது ஆரம்பத்தில் தவிசாளர் மாஹிரின் அறிவுறுத்தலுக்கமைய துருக்கி, சிரிய பூகமதம்ப அனர்த்தத்தில் மரணித்தவர்களுக்காக சபையில் இரு நிமிடமௌனம் அனுஸ்டிக்கப்பட்டது.
அத்துடன் மேற்படி பூகம்ப அனர்தத்தில் மரணித்தவர்களுக்கான அனுதாபப் பிரேரணை ஒன்றையும் தவிசாளர் மாஹிர் முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனுதாப பிரேரணையை முன்மொழிந்து தவிசாளர் மாஹிர் உரையாற்றுகையில்!
துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பெரும் வேதனைக்குரிய துயர சம்பவமாகும்.
சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்திருக்கின்றனரெனக் கணிப்பிடப்பட்ட போதிலும் மேலும் அதிக தொகையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமெனவே நம்பப்படுகின்றது.
உலகையே உலுப்பிவிட்டிருக்கும் இந்தப் பேரழிவால் துயருற்றிருக்கும் நிர்க்கதி நிலைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் துயரில் நாமும் பங்கு கொள்வோம்.
எனவே, இப்பேரனர்தத்தினால் உயிரிழந்தவர்களின் உறகளுக்கும், பாதிப்புற்றுள்ள மக்களுக்கும் எமது சம்மாந்துறை பிரதேச சபை சார்பிலும், பிரதேச மக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டெழவும் அம் மக்களின் துயரங்கள் தீரவும் இறை பிரார்த்தனையை நாம் முன்னெடுப்போம் என்றார்.
மேலும் இந்த அனுதாப்ப பிரேரணையை இலங்கையிலுள்ள மேற்படி நாடுகளின் தூதரங்களுக்கு அனுப்பிவைப்பதெனவும் அமர்வில் முடிவு செய்யப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)