
posted 28th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வவுனியா - செட்டிகுளம் - சின்னசிப்பிகுளத்தில் விவசாய கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த யானைகள் பலரின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணற்றினுள் நேற்று (27) திங்கள் காலை நான்கு யானைகள் தவறி வீழ்ந்ததை அறிந்த கிராமவாசிகள் அது தொடர்பாக செட்டிகுளம் பிரதேச சபை மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், செட்டிகுளம் பிரதேச சபைக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நான்கு யானைகளையும் மீட்டு பாதுகாப்பாக காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)