
posted 12th February 2023
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் விடுத்த வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக கெளரவ மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம். றகீப் தெரிவித்தார்.
ஆகையினால் அன்றைய தினம் எந்தவொரு தனியார் கல்வி நிலையதையும் திறக்காமல் ஒத்துழைக்குமாறு அவர் கோரியுள்ளார்..
இதனை கண்காணித்து, உறுதி செய்யுமாறு மாநகர சபையின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் தங்களது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)