காணிகளை விட்டாலும் குடியேறத் தயங்கும் மக்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வலி. வடக்கில் இராணுவத்தினர் விடுவித்த காணிகளை உரிமையாளர்கள் குடியேறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். மக்கள் குடியேறுவதன் மூலமே படையினரிடம் உள்ள காணிகளை மேலதிகமாக விடுவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன்.

மாவட்ட செயலகத்தில் நேற்று புதன் (22) நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவம், கடற்படையிடம் இருந்து 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஓர் இடர்பாடு உள்ளது.

முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை முழுமையாகக் கையேற்று அதனை உரிய பாவனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாகக் காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்.

விடுவிக்கப்பட்ட காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறிய பின்னர், கட்டடங்களை அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கையேற்கத்தவறுவதால் கட்டப் பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. எனவே, விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களின் காணிகளில் குடியேறுவதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் இதன்போது சொன்னார்.

காணிகளை விட்டாலும் குடியேறத் தயங்கும் மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)