
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் நாற்பது நாட்கள் நீடிக்கின்ற தவக்காலம் சாம்பல் புதனாகிய இன்று (22) ஆரம்பமாகின்றது.
சாம்பல் புதன் என அழைக்கப்படும் இன்று (22) ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயங்களிலும் திருப்பலி வேளையில் குருவானவர் ஒவ்வொருவரினதும் நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமிட்டு 'மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்' என மறு உலக வாழ்வை நினைவூட்டும் தினமாக இந்த விபூதி புதன் அமைந்திருக்கின்றது.
இதன் தினம் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்றபோது பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ். டிக்சன் அடிகளார் இத் திருச்சடங்கை நடாத்தியபோது கலந்து கொண்ட ஒரு பகுதி பக்தர்களையும் படங்களில் காணலாம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)