
posted 9th February 2023
சேர்ச் ஒவ் இங்கிலனட் (Church of England) வாக்கொடுப்பொன்றை நிகழ்த்தியது. அவ் வாக்கெடுப்பானது, ஒரே இனக் கல்யாணம் அல்லது சட்டத்துடனான சேர்ந்திருப்பது என்பவற்றிற்கான அங்கீகாரமும் அதற்கு வழங்கும் ஆசீர் வாதத்தைப் பற்றியதாகும். இவ் வாக்கெடுப்பில், மேற்றாணிமாரும், குருக்களும் கலந்து கொண்டனர்.
அவ்வாக்கெடுப்பில், 57%மானோர் ஆதரவாகவும், 41%மானோர் எதிராகவும், மீதியான வீதமேனோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களாகவும் இருந்தது.
ஆனால், கடவுளின் படைப்புப்படி, கிறீஸ்தவர்களின் பரிசுத்த வேதாகமம் கூறுவதின் படி ஆதித் தந்தை (ஆதாம்) ஆணாகவும், அவரிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட தாய் (ஏவாள்) பெண்ணாகவுமே படைக்கப்பட்டார்கள்.
இவ்வாறான வாக்கெடுப்பினால் உருவாக்ப்படும் அங்கீகாரங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுமா? என்பதுதான் வாழ்க்கையில் ஓடும் கேள்வியாகும்.