ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் தனித்துவத்தைப் பேணி தனித்தே போட்டியிடுவதாக, கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கட்சியின் தனித்துவத்தைப் பேணி கொழும்பு மாநகர சபை உட்பட பல மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுகின்றது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)