
posted 22nd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்முனை றோட்டரிக் கழகம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்கேணி கிராமத்தில் வசிக்கின்ற வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
இதற்கான நிதியை அன்பாலயம், அவுஸ்திரேலியாவின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
கல்முனை றோட்டரி கழகத் தலைவர் றோட்டேரியன் விஜயரத்தினம் விஜயசாந்தன் தலைமையிலான றோட்டரி உறுப்பினர்கள் அங்கு சென்று அதனை வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரிசி,பருப்பு,கோதுமை மா,சீனி,சோயா என்பன உட்பட்ட 20 கி.கி நிறையுடைய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கழக பொருளாளர் றோட்டரியன் எம்.சிவபாதசுந்தரம், றோட்டரியன் நாசர் உள்ளிட்ட நான்கு அங்கத்தவர்களுடன், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)