
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
வவுனியாவில் உமா மகேஸ்வரனின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா கோவில்குளத்தில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான த. சித்தாத்தன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரதேச சபை தலைவர்களான சுப்பையா ஜெகதீஸ்வரன், த. யோகன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)