
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சமகால பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட நான்கு கிராமங்களில் வாழும் ஒரு தொகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி, உமிரி, காயத்திரி கிராமம், விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய கிராமப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 10450.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் திட்ட இணைப்பாளர் அனிதா செல்வகுமார், மீளாய்வு கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி கிரிஜா, திருக்கோவில் கள உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கினர்.
தெரிவு செய்யப்பட்ட இருபது பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு 10450.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதி அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திட்ட இணைப்பாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச களச் செயலாளி மற்றும் திருக்கோவில் குழு தலைவிமார் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)