
posted 21st February 2022
சம்பள உயர்வு கோரி வவுனியா வடக்கு முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
பல வருடங்கள் சேவைக்காலம் எமக்கு காணப்படுகின்ற போதும் எமக்கான நிரந்தர நியமனம், மற்றும் சம்பள உயர்வு பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
சாதாரண தொழிலாளியின் அடிப்படைச் சம்பளமான 13 ஆயிரம் ரூபாவைக் கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வருடாவருடம் ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை. முன்பள்ளி ஆசிரியர்களான நாம் பல்வேறு சமூக பிரச்னைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பௌதீக வளப்பற்றாக்குறை, அரசியல் தலையீடு, அபிவிருத்தி பின்னடைவு, தனியார் பள்ளிகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.
எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி உயர் அதிகாரிகள் உணராது இருப்பது துரதிஸ்டவசமாகவே காணப்படுகின்றது. எமது வலயத்தில் மாத்திரம் 120 ஆசிரியர்கள் மிகவும் குறைந்த கொடுப்பனவுடன் கடமையாற்றி வருகிற்றனர்.
எதிர்காலச் சந்ததியினர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு முன்பிள்ளை பருவக்கல்வியே துணைபுரியும் என்பது திண்ணம். எனவே நாளைய சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட தலைவர் எனும் வகையில் பெண்களின் சமூக, பொருளாதார பிரச்னைகளைகளை உரிய அதிகாரிகள் தீர்க்கவேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்து கலந்துரையாடியதுடன் ஒரு வாரத்தில் இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House