மூன்று தடுப்பூசிகளும் போட்டவர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளலாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எதிர்வரும் 01.03.2022 அன்று நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெறும் இவ் விழாவானது சுகாதார துறையினரின் வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற இருப்பதாக திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழா தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆரம்ப கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் ஆலயத் திருப்பணிச் சபையினரின் பிரதிநிதிகள இது தொடர்பான திணைக்கள அதிகாரிகள் என பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் எதிர்வரும் 01.03.2022 அன்று நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெறும் இவ் விழாவானது சுகாதார துறையினரின் வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெறும் என்றும் அன்றைய தினம் ஆலயத்திற்கு வருகைதரும் 19 வயதிற்கு மேற்பட்ட அடியார்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியின் முன்றாவது பூஸ்டர் தடுப்பூசினையும் இரு வாரங்களுக்கு முன்னர் பெற்றிருத்தல் அவசியம் என சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதால்

இதற்கமைய மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட தொகையான அடியார்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தடுப்பூசிகளும் போட்டவர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளலாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House