மீனவர்கள் தொழிலுக்காக இந்தியாவின் வேறு பகுதிக்கு படையெடுப்பு

இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதால் ராமேஸ்வரத்திலுள்ள அதிகமான மீனவர்கள் தங்கள் பகுதியை விட்டு தொழிலுக்காக இந்தியாவின் வேறு மாநிலமான மங்களுர் பகுதிக்கு செல்லுவதால் தற்பொழுது ராமேஸ்வரத்தில் மீனவ தொழிலாளிகள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராமேஸ்வரத்திலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட இந்திய இலுவைப்படகுகள் மீன்பிடிக்காக அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும், கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதால், ராமேஸ்வரத்திலுள்ள அதிகமான மீனவர்கள் தங்கள் பகுதியை விட்டு தொழிலுக்காக இந்தியாவின் வேறு மாநிலமான மங்களுர் பகுதிக்கு செல்லுவதால் தற்பொழுது ராமேஸ்வரத்தில் மீனவ தொழிலாளிகள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சொற்ப இந்திய இலுவைப்படகுகளே தற்பொழுது ராமேஸ்வரப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது என அங்குள்ள மீனவ வட்டாரம் தெரிவிக்கின்றது.

இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (12.02.2022) மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடிததுடன் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். எனவும் இதனால் மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றுக்கு இந்திய ரூபாயில் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் ரயில் மறியல் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடி கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த டிசம்பர் மாதம் 18ந்தேதி முதல் தொடர்ந்து தமிழக மீன்பிடி படகுகளையும் தமிழக மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொழிலுக்காக இந்தியாவின் வேறு பகுதிக்கு படையெடுப்பு

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House