
posted 13th February 2022
தங்கள் வாழ்வாதாரத்தில் மோசமடைந்து வரும் மீனவர்களுக்கு வீர வசனங்களை விட்டு உசுப்பேத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் சுயலாபங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட இருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடத்திருக்கும் செய்தியில் தொடர்ந்து தெரிவிப்பதாவது;
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் வடக்கு மாகாண மீனவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மோசமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களாக வீதியில் போராட இறங்கியபோது, மீனவர்களுக்காக குரல் கொடுப்பது போல மக்கள் போராட்டங்களுள் உள் நுழைந்து உசுப்பேத்தும் வீர வசனங்களை விட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் சுயலாபங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட இருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.
உண்மையாக இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களையும், வடக்குமாகாண மீனவர்களையும் முரண்பட வைக்கும் பொறியாக மீனவர் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றது. இதற்கு ஆதரவாகவே முன்னணியின் ஒத்திவைப்பு பிரேரணை நாடகமும் அரங்கேறியுள்ளது.
வடமாகாண மீனவர்களின் பிரச்சனைக்கு பாராளுமன்றத்தில் கதைப்போம் என்று வடமராட்சி மீனவர் போராட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்த முன்னணி பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சிந்திக்காது அரசாங்கத்தின் நலன்கள் பாதிக்காத வகையில் மீனவரின் வாழ்வாதாரப் பிரச்சினையை பலியிட்டுள்ளனர் தமிழ்த் தேசிய முன்னணியினர்.
முன்னணியின் வெற்றுக் கோசங்களும் உசுப்பேத்தும் ஊடக அறிக்கைகளும், தொடர்ந்து பொய்யுரைக்கும் செயற்பாடுகளும், இனத்தின் விடுதலைக்கு அர்த்தமற்றவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House