
posted 28th February 2022
மீண்டும் கைதான இந்திய மீனவர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்காக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் தாம் கைது செய்துள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கடற்படை தெரிவித்தது.
தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் எண்மரையும் கைது செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் தடுத்து வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் - சிவஞானம் சிறீதரன்
தமிழ் மக்களை சாகடிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டனர். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அந்தக் கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒரு பொலிஸ் உயிரிழந்தார்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் வந்து விட்டு , மன்னார் நோக்கி திரும்பும் வேளை பூநகரி - சங்குப்பிட்டி பாலம் கடந்து சற்று தொலைவில் , இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House