மின்காற்றாலைகள் நிறுவுவதை  எதிர்க்கும் மன்னார் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் தீவை தொடர்ந்து மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதியிலுள்ள நானாட்டான் பிரதேச செயலகத்துக்குரிய கிராமங்களிலும் மின் காற்றாடிகளை அமைப்பதற்கான பேச்சு வார்த்தையின்போது மன்னார் பிரiஐகள் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மன்னார் தீவில் நடுக்குடா மற்றும் பேசாலையில் நிறுவப்பட்டுள்ள தலா 03 விசிறிகளைக் கொண்ட 36 மின் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மன்னாரில் இவைகள் நிறுவப்பட்டுள்ளமையால் மன்னார் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு பலதரப்பட்ட காரணிகளால் மக்கள் அச்சத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்க்பட்டுள்ள நிலையில்

தற்பொழுது மன்னார் தீவின் தென்மேற்குக் கடற்கரையை அண்டிய அச்சங்குளம் நறுவிலிக்குளம் மாதிரி கிராமம் உமனகரி மற்றும் பாசிக்குளம் ஆகிய மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதியான நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களில் மின் காற்றாடிகள் நிறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்தபின் மன்னார் பிரiஐகள் குழு ஆளுநர் சபையினரையும் சந்தித்து கலந்துரையாடியது.

தற்பொழுது ஏற்கனவே மக்களுக்கு சரியான விளக்கம் இல்லாத நிலையில் மன்னார் தீவில் நிறுவப்பட்ட மின் காற்றாலைகளால் மக்கள் தங்கள் வாழ்வாதரம் மற்றும் வேறு பல காரணிகளால் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மன்னார் மக்கள் பாதிப்பகளுக்கு உள்ளாகுவதை மன்னார் மக்களின் வேண்டுதலுக்கு அமைய மன்னார் பிரiஐகள் குழு விரும்பவில்லையென தங்கள் கருத்துக்களை விரிவாக அந்த நிறுவன குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர்.

மின்காற்றாலைகள் நிறுவுவதை  எதிர்க்கும் மன்னார் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House