
posted 6th February 2022
மன்னார், அரசாலும் வெளிநாட்டின் நிறுவனங்களாலும் அழிவுப் பாதைகளுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது. மன்னார் மக்கள் இதையிட்டு விழிப்புணர்வு கொள்ளாவிடில் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் நிலையே ஏற்படும் என மன்னார் மாவட்ட கூட்டுறவு சங்க சமாஜத்தின் செயலாளரும் வட மாகாணத்தின் கடற்தொழில் அமைப்பின் மன்னார் மாவட்ட இணை தலைவருமான முகமட் ஆலம் தெரிவித்தார்.
இந்திய இழுவைமடிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் (சுப்பர் மடத்தில்) மீனவர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மன்னார் மீனவ சமூகம் சகோதரத்துவத்துடான ஒத்துழைப்பை வழங்குவதற்காக தெரிவித்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவில் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் மன்னார் நகரில் சனிக்கிழமை (05.02.2022) ஒரு சில மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.
இதன்போது முகமட் ஆலம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
தொடர்சியாக இடம்பெற்றுவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலான மீன்பிடியும், இழப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், இறுதியாக ஏற்பட்ட உயிரிழப்புகளையும் எதிர்த்து, நியாயம் கேட்டு தொடர்ச்சியாகப் போராடும் மீனவர் சமூகத்தின் கோரிக்கையினைக் கண்டு கொள்ளாத இலங்கை அரசின் அசட்டைத்தனம் ஒருபக்கம் இருக்கையிலே, அரசோ நாட்டை வெளி நாடுகளுக்கு அடவு வைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்திய இலுவைப்படகுகளின் தொடர்ச்சியான வருகையால் கடல் வளம் அழிக்கப்படுவதுடன் இப்பொழுது எங்கள் உயிர்களையும் இழக்கும் நிலை ஏற்படத் தொடங்கி விட்டது.
இவ்வாறான நிலை தொடருமாகில் யாழ் மீனவர்கள் மாத்திரமல்ல எதிர்காலத்தில் மன்னார் முல்லைத்தீவு மீனவர்களின் உயிர்களும் காவுக்கொள்ளும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இது மீனவர்களின் பிரச்சனை என ஏனையோர் ஒதுங்கி வாழ்கின்றனர். அனைவரும் எமது நாட்டின் வளத்தையும் உயிர்களையும் தொடர்ந்து காவு கொள்ளாதிருக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது கனியவள மணல் அகழ்வு, காற்றாலை மின்சாரம் என ஒவ்வொரு பிரச்சனைகளாக மன்னாருக்கு எழத் தொடங்கிவிட்டது.
இதனால் மன்னார் தீவு அழியும் அபாயம் ஏற்படலாம். இதையிட்டு மன்னார் மக்களில் எத்தனைபேர் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதைவிட மன்னார் மக்கள் இப்பொழுதே விழிப்புணர்வு கொண்டு செயலில் இறங்க வேண்டும். எமது எதிர்கால சந்ததினர் நலன்நோக்கி நாம் இப்பொழுதே செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House