மன்னாரைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணி வீரர் டக்ஸன்  பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மன்னாரைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணி வீரர் டக்ஸன்  பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னாரைச் சேர்ந்த இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான டக்ஸன் பியூஸ்லஸ் நேற்று மாலைதீவில் உயிரிழந்தார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் தடுப்பாட்டநுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், உதைபந்தாட்ட உலக கிண்ண கோப்பைக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேநேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார். கடந்த ஆண்டு இடம்பெற்ற எஸ். ஏ. எவ். எவ். உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம்பெற்ற கருத்து கணிப்பில் பியூஸ்லஸ் இரண்டாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மன்னாரைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணி வீரர் டக்ஸன்  பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House