
posted 17th February 2022

வைத்திய கலாநிதி ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களில் ஒவ்வொரு 120 பேருக்கு ஒருவர் வீதம் மரணம் சம்பவிக்கின்றது. இத் தொகையானது 0.8% மாக இருந்தாலும் இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டுமென மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி. வினோதன் தனது ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
பணிப்பாளர் வியாழக்கிழமை (17.02.2022) தனது பணிமணையில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது தொடர்ந்து தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் புதன்கிழமை (16.02.2022) மேலும் 12 பேர் கொவிட் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட இம்மாதத்தில் மொத்தமாக 377 பேரும், இவ்வாண்டில் (2022) மொத்தமாக 578 பேரும் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இம்மாதம் கோவிட்டினால் இறந்தவர்கள் 3 பேரும், இவ்வருடம் மொத்தமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, மக்கள் 3ஆவது தடுப்பூசியைப் போடாதவர்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.
அத்துடன் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களை கேட்டு நிற்கின்றோம்.
அத்துடன் பாடசாலைகளில் இதுவரை மொத்தமாக 12643 மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கல் புதன் கிழமை (16.02.2022) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது 16 வயதிலிருந்து 20 வயதுடையோருக்கு இத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று (16.02.2022) மாலை வரை 799 மாணவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதை வரவேற்கின்றேன். மேலும், அடுத்த கட்டமாக எதிர்வரும் புதன்கிழமைக்கு (23.02.2022) முன்னர் இவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், தவணை ஆரம்பிக்கும்போது 16 வயது தொடக்கம் 20 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் இரண்டாவது தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான்
மேலும் மன்னார் மாவட்டத்தில், 39%மான பொதுமக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதால், மீதியானவர்களுக்கும் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம். நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 59.3 சத வீதமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி திருக்கேதீஸ்வர சிவராத்திரி உற்சவத்தில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் முழுமையான தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும்.
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடக்காதவர்களும் மற்றும் இண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்து பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்தார், பணிப்பாளர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House