மட்டக்களப்பில் கருத்தரங்கு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முக்கிய கருத்தரங்கு ஒன்று நடைபெறவிருக்கின்றது.

“அதிகாரப் பகிர்வில் 13 ஆவது திருத்தத்தின் நோக்கு நிலை” எனும் தலைப்பிலான இக்கருத்தரங்கு மட்டக்களப்பு நகர் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இயக்கத்தின் தலைவர் வீ.எஸ். சிவகரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில்,

தமிழ் பேசும் மக்களின் ஐக்கியமும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பில், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும், இராஜதந்திர நோக்கு நிலையில், தமிழர் அரசியல் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் யதீந்திராவும், கிழக்கு மக்களின் இருப்பும், அரசியல் அணுகு முறைகளும் எனும் தலைப்பில் வா. குணாளனும் கருத்துரைகளாற்றும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஆகியோரும் கருத்துரைகள் ஆற்றவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் முதன்முதலாக இந்த பொதுவான கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கருத்தரங்கு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House