பொருளாதார நெருக்கடி தொடர்பான எமது கூட்டான மாருத்தரம்/ நிலைப்பாடு

கீழே கையொப்பமிட்டுள்ள நாம், நடைமுறையில் எதிர்கொண்டிருக்கும், முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார சவால்களின் தன்மையை உணர்ந்து, எம்மை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு அவசரமான, ஆக்கபூர்வமான மற்றும் நிலையான தீர்வுகளை வேண்டி நிற்கின்றோம். கீழ்வரும் விடயங்களை நாம் அவதானித்துள்ளோம்:

1. சர்வதேச கடன் சந்தைகளில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு நாட்டின் மதிப்பீடுகள்
வீழ்ச்சியடைந்துள்ளன. ஏப்ரல் 2020 முதல், சர்வதேச சந்தையில் சர்வதேச பிணைமுறி பத்திரங்களை (ISB) பயன்படுத்தி கடன் வாங்குவதில் இருந்து இலங்கை தடுக்கப்பட்டுள்ளது.

2. இந்தச் சூழலில் அமெரிக்க டொலர் வடிவிலான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் ஒரு மாத இறக்குமதிக்கு தேவையான அளவிலும் குறைவாகவே உள்ளது - இது சுதந்திரத்திற்குப் பின்பதாக பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்தளவான இருப்பாகும்.

3. அரசின் கடனுக்கான வட்டி விகிதம் 2020 இல் 70% க்கும் அதிகமாக இருந்தது, இது இலங்கையின்
வரலாற்றில் மிக உயர்வானது என்பதோடு உலகின் மிக உயர்வன விகிதங்களுல் இது அடங்கும்.

4. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மதிப்புடன் ஒப்பிடும் போது பொதுக் கடனின் விகிதமும் 120% ஆக மிக உயர்ந்த விகிதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்ணளவாக 25 சதவீத புள்ளிகளால் உயர்ந்துள்ளது. இவ்விரண்டு சூழ்நிலைகளும்
ஒரு பாரதூரமான பொருளாதார நெருக்கடியினை தோற்றுவிக்கும்.

ஒரே நேரத்தில் நிகழும், இந்த அழுத்தமானதும் வரலாறு காணாததுமான பொருளாதார நெருக்கடி குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இரண்டிலும் நமது எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்திற்கு ஒரு கடினமான பணி உள்ளது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், மேலும் ஒரு நாடாக இந்த சவாலை கடந்து வர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியின் பாதகமான தாக்கத்திலிருந்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை பாதுகாக்கப்படுவதற்கு, இலங்கை தனது மக்களுக்கு வலுவான சமூக நலனை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
மேலும் நாம், தேசிய பொருளாதாரக் கொள்கையில் திறமான சீர்திருத்தத்தின் அவசியத்தை ஒப்புக்கொள்வதோடு, அச்சீர்திருத்தம் இந்த நிலைமைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யவும் மற்றும் முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் நிலையான தீர்வுகளை உறுதி செய்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு சமமான மற்றும் நியாயமான தீர்வை உருவாக்கும் எனவும் அங்கீகரிக்கின்றோம்

பொது நிதியின் முழுக் கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது என்பதையும், இலங்கையில் பொது நிதிகளை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் நம்பிக்கையான பொறுப்பு உள்ளது என்பதையும் நாங்கள் முழுமையாக அறிவோம்.
இவ்வாறான சூழலில், இலங்கையின் பிணைமுறி கடனை மீள் செலுத்தும் பொருட்டு ஒழுங்கமைவான பேச்சுவார்த்தை மூலமான ஒத்திவைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பல படிமுறைகளடங்கிய செயல்முறையை உடனடியாகத் தொடங்குவதே சிறந்த முன்னோக்கிய வழி என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

அதன் பின்பதாக இலங்கை நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் முகாமைத்துவ பாதையை நோக்கி தனது கொள்கைகளை சரிசெய்து கொள்ளவும், அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அதன் மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்களை அணுகக்கூடியதை உறுதிப்படுத்தவும் முடியும். இதன் மூலம் நடைமுறையின் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் முகம் கொடுக்கும் இன்னல்களும், கஷ்டங்களும் குறைவடையும். எந்தவொரு முன்னோக்கிய பாதையிலும், நாட்டில் உள்ள வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு போதுமான சமூக மற்றும் ஏனைய பாதுகாப்பு, மற்றும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

ஒப்பமிட்டுள்ளோர்:

கௌரவ. சஜித் பிரேமதாச

கௌரவ. ரவூப் ஹக்கீம்

கௌரவ. திஸ்ஸ விதாரண

கௌரவ .ம.ஆ.சுமந்திரன்

கௌரவ.கபீர் ஹஷிம்

கௌரவ .ஹர்ஷ டி சில்வா

கௌரவ எரான் விக்ரமரத்ன

கௌரவ.சாணக்கியன் ராசமாணிக்கம்

கௌரவ . மனோ கணேசன்

கௌரவ . ரிஷாட் பதியுதீன்

கௌரவ . கரு ஜயசூரிய

கௌரவ. இரா.சம்பந்தன்

ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>>> Collective Responses

பொருளாதார நெருக்கடி தொடர்பான எமது கூட்டான மாருத்தரம்/ நிலைப்பாடு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House