பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை  கொட்டினால் சட்ட நடவடிக்கை - வேலணை தவிசாளர்

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் வெளி இடங்களிலிருந்தும், உள்ளூரின் சில நபர்களாலும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வேலணை பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அறிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (24) தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுற்றுச் சூழல் சுகாதார விடயங்கள் தொடர்பில் உறுப்பிர்களால் சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையிலேயே தவிசாளர் இவ்வாறு அறிவித்திருந்தார்.

இது தொட்ர்பில் அவர் மேலும் கூறுகையில்;

வேலணை பிரதேசத்தில் வாழும் மக்கள் நாளாந்தம் அகற்றும் குப்பபைகள் மற்றும் கழிவுகளை எமது சபையின் சுகாதார பிரிவினர் தரம்பிரித்து அகற்றுவதில் முடியுமானவரை சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேநேரம் பல பகுதிகளில் வெளியார் அல்லது வெளி பிரதேசங்களில் இருந்து குப்பைகள்’ மற்றும் தரக்குறைவான கழிவுகளை கொண்டுவந்து வீதிகளிலும் பொது இடங்களிலும் இரகசியமான முறையில் கொட்டிவிட்டு செல்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் அவற்றை அவதானித்தும் உள்ளோம்.

அந்தவகையில் அவ்வாறு குப்பைகளை கொண்டுவந்து கொட்டும் நபர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எமது பிரதேச சபையால் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவ்வாறு கொண்டுவந்து குப்பைளை கொட்டும் நபர்கள் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளை எவரும் எமது பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தியுள்ள தவிசாளர் அதனை கட்டுப்படுத்த சபையின் ஆதரவுடன் பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை  கொட்டினால் சட்ட நடவடிக்கை - வேலணை தவிசாளர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House