
posted 5th February 2022

கலாநிதி எம்.ஐ.சபீனா இம்தியாஸ்
தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ.சபீனா இம்தியாஸ் (23.12.2020) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட உதவி விரிவுரையளராக இணைந்து கொண்ட இவர் 1998 இல், நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-2 தரம்-1 மற்றும் துறைத்தலைவர், கல்விசார் திணைக்களங்களின் தலைவர், இணைப்பாளர், மாணவர் ஆலோசகர், பணியாளர் மேம்பாட்டு திணைகளத்தின் தலைவர் என பல்வேறுபட்ட பொறுப்புக்கள் மற்றும் பதவியுயர்வுகள் பல பெற்றதுடன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக தொடர்ச்சியாக 14.06.2010 முதல் 23.07.2016 வரை இரு தடவைகள் கடமையாற்றினார்.
இவர் ஆரம்ப மற்றும் உயர் கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றதுடன் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியல் துறையில் சிறப்பு சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பப்பட்டார்.

ஏ.எல்.எம்.சலீம்)
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House