புகைப்பட கண்காட்சி!

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 40 மலையக இளைஞர்கள் மற்றும் யுவதிகளால் மலையக மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையிலான 190 புகைப்படங்கள் அடங்கிய தேயிலைச்சாயம் கண்காட்சி மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபம் மற்றும் சாள்ஸ் மண்டபம் ஆகியவற்றில் ஆரம்பமானது. இக்கண்காட்சி நாளை(18) பிற்பகல் 6.00 மணிக்கு நிறைவு பெறவுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் புகைப்படப் பிரிவுக்குப் பொறுப்பான லைறு கித்துலகம தெரிவித்தார்.

இந்த வகையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் 100 புகைப்படங்களும், சாள்ஸ் மண்டபத்தில் 90 புகைப்படங்களுமாக 190 புகைப்படங்கள் பார்வைக்காக வைக்கப்பட் டிருந்தன.

இக்கண்காட்சியில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர்கள் 40 பேரும் கடந்த மூன்று வருடங்களாகப் புகைப்படத் துறையில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் மலையகத்தின் பதுளை மாவட்டத்திலிருந்து 20 இளைஞர், யுவதிகளும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 20 இளைஞர், யுவதிகளுமாக மொத்தம் 40 பேர் தெரிவாகியிருந்தனர்.

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு சுயசக்தி நிறுவனமும், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு ஊவா சக்தி நிறுவனமும் பயிற்சியினை வழங்கியிருந் தனர்.

இவர்களால் எடுக்கப்பட்ட 4 இலட்சத்து 50 ஆயிரம் புகைப்படங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 190 புகைப்படங்களே இவ்விதம் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்படக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா. ஜீவன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்புகைப்படங்கள் அடங்கிய ஆவணத்தை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா. ஜீவனிடம் தேயிலைச் சாயம் புகைப்படக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் எ. செல்வராஜா வழங்கி வைத்தார்.

புகைப்பட கண்காட்சி!

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House