
posted 25th February 2022

சபா குகதாஸ்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மூடிமறைக்க அரசு கடும் பிரையத்தனம் எடுக்கும் இவ்வேளையில், தமிழர் தரப்பு யாவரும் ஒற்றுமையாக இருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுக் கொடுக்கும். அனைத்து மக்களும் தங்களுக்குள் பிரிவினைகள் வேறுபாடுகளைக் களைந்து வெளி சக்திகளின் ஆதிக்கங்களை உள்நுழைய விடாது இருந்தால் நீதிதேவதை நம்பக்கம் இருக்கும்m என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
இலங்கை அரச படைகளினால் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இருபத்து ஐயாயிரம் குடும்பங்களுக்கு அதிகமானோர் ஆண்டுக் கணக்காக தேடி அலைந்த வண்ணம் உள்ளனர். இவர்களது விபரங்கள் பல சர்வதேச ஆவணங்களிலும் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.
யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தால் வீடுகளில் புகுந்து கடத்தப்பட்டவர்கள், இறுதிப் போரில் இராணுவ சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களால் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என சாட்சியங்களுடன் உள்ள விடையத்தை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்க தற்போது கடும் பிரையத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
இவ் விடையம் சர்வதேச ரீதியாக மனிதவுரிமை செயற்பாட்டில் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களையும், அபகீர்த்தியையும், நெருக்குவாரங்களையும் கொடுத்த வண்ணம உள்ளது. இதில் இருந்து விடுபட சிங்கள ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் இதனை கைவிடுமாறும், காணாமல் போனவர்கள் வரவில்லை என்றால் அர்த்தம் என்ன? காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என பொறுப்பற்ற வகையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைக் கொடுக்காமல் மூடி மறைத்து, மறப்போம், மன்னிப்போம் என்ற வகையில் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது இனப்படுகொலை அரசாங்கம்.
ஆகவே தமிழர் தரப்பு ஒற்றுமையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுக் கொடுக்கும். பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்குள் பிரிவினைகளை களைந்து வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது உறுதியாக பயணிப்பதே நீதிக்கான கதவுகளை திறக்கும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House