
posted 22nd February 2022
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கும் எதிரானதே பயங்கரவாத தடைச் சட்டமாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி கல்முனை நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கையெழுத்துத் திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி ஏற்பாட்டில் அதன் துணைச் செயலாளர் அ. நிதான்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;
1979 ஆம் ஆண்டு எமது நாட்டில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத சட்டமானது ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மனித உரிமை சாசனத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிரான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. இது மனித குலத்திற்கு தேவையற்ற சட்டமாகும்.
எல்லாவிடரையும் விட இது இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு சட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தின் ஊடாக ஒருவர் கைது செய்யப்பட்டால், தன்னுடைய கருத்தை சொல்வதற்கு கூட அந்த நபருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் மறுக்கப்படுகிறது என கல்முனை முதல்வர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், அழககோன் விஜயரட்ணம், சோ. குபேரன், தி. இராசரட்ணம், சந்திரசேகரம் ராஜன், எம். சிவலிங்கம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House