
posted 14th February 2022

டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக்
“கொவிட் - 19 திரிபுகளாக பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதில் மிக மிக் குறைந்த ஆர்வத்தையே பொது மக்கள் காட்டிவருகின்றனர். இது அச்ச நிலமையை அதிகரித்துள்ளது” இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் கவலை தெரிவித்துள்ளார்.
கொவிட் - 19 வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பரவலின் கிழக்கு மாகாண நிலமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பணிப்பாளர் டாக்டர். தௌபீக் இது விடயமாக மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
கொவிட் ஒமிக்ரோன் பரவல் நாடளாவிய ரீதியில் மிக வேகமாகப் பரவிவருவதுடன் கிழக்கு மாகாணத்திலும், இந்த கொவிட் திரிபு பரவல் அதிகரித்துவருகின்றது.
எனினும் இப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எமது மக்கள் மிகவும் அக்கறையற்ற நிலையிலுள்ள அதேவேளை இதற்கான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் பெரும் அசட்டையாகவுள்ள நிலமையையே அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கிழக்கில் முதலாம், இரண்டாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் காட்டிய பேரார்வம், தற்போதய நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் காட்டுவதாக இல்லை.
ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் இந்த அசமந்தம் பெரும் அச்சத்தையே தருகின்றது.
ஜனாதிபதியும், அரசும் முன்னெடுத்துவரும் தடுப்பூசி வழங்கல் தொடர்பான சிறந்த திட்டத்தை, பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் மூலமும் நாம் வெற்றியடையச் செய்ய வேண்டும்.
வீண் வார்த்தைகளையும், தவறான தகவல்களையும் நம்பி பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள இனியும் தயக்கம் காட்டக் கூடாது.
ஒமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்தவும், ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் பூஸ்டர் தடுப்பூசி மிக முக்கியமாகும்.
எனவே, எத்தகைய தயக்கமும் காட்டாது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு வாழ் மக்கள் முன்வர வேண்டும்” என்றார்.
இதேவேளை கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் இராணுவத்தினரும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, பொது மக்களிடம் கொவிட் தடுப்பூசி அட்டைகளைப்பரிசோதிக்கும் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் தற்பொழுது முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த புதிய திரிபு உருவாகவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஒமிக்ரோனுக்கு அடுத்ததாக புதிய உருமாறிய கொவிட் தொற்று பரவுவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் கொவிட் தொழில் நுட்பப் பிரிவுத்தலைவர் மரியாகிர் கோவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House