
posted 10th February 2023
படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பாண்டிருப்பில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமரர் அரியநாயகம் சந்திரநேருவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2005.02.07ஆம் திகதி வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)